பி.டி.தினகரனுக்கு ஆதரவாக 2 காங். எம்.பிக்கள் ராஜ்யசபாவில் பேச்சு
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை குறி வைத்து சிலர் செயல்படுவதாக இரண்டு காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜ்யசபாவில் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நில ஆக்கிரமிப்பு, முறைகேடாக சொத்துக்கள் வாங்கியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் பி.டி.தினகரன். அவரை இம்பீச் செய்யக் கோரி ராஜ்யசபாவில் 75 எம்.பிக்கள் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில், பூஜ்ய நேரத்தின்போது, பிரவீன் ராஷ்டிரபால், ஜே.டி. சீலம் ஆகிய இரு காங்கிரஸ் எம்.பிக்கள் எழுந்து, தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால்தான் அவரைக் குறி வைத்து சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்றனர்.
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குறுக்கிட்ட ராஜ்யசபாவை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே.குரியன், இந்த விவகாரத்தை இங்கு எழுப்ப வேண்டாம் என்று கூறி விவாதத்திற்கு அனுமதி மறுத்தார்.












Click it and Unblock the Notifications