யுஎஸ்: இந்த வாரம் 7 வங்கிகள் மூடல்!
நியூயார்க்: வழக்கம் போல இன்றும் திவாலான அமெரிக்க வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது அமெரிக்க காப்பீட்டுத் துறை.
இந்த வாரம் மட்டும் 7 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அவை:
ஃபர்ஸ்ட் ஃபெடரல் பேங்க் ஆப் கலிபோர்னியா, இம்பீரியல் கேபிடல் வங்கி, இன்டிபெண்டன்ட் பேங்கர்ஸ் பேங்க், நியூ சவுத் ஃபெடரல் சேமிப்பு வங்கி, சிட்டிஸன்ஸ் ஸ்டேட் வங்கி, பீப்பிள்ஸ் ஃபர்ஸ்ட் கம்யூனிட்டி வங்கி மற்றும் ராக்பிரிட்ஜ் கமர்ஷியல் வங்கி.
இந்த 7 வங்கிகள் மூடப்பட்டதால் அமெரிக்க காப்பீட்டுத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு 1.8 பில்லியன் டாலர்கள்.
அமெரிக்க காப்பீட்டுத் துறையால் உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்த வங்கிகள் 8000. இவற்றில் இந்த வாரம் மூடப்பட்ட 7 வங்கிகளையும் சேர்த்தால், இந்த ஆண்டு மட்டும் 140 வங்கிகள் மூடப்பட்டு விட்டன.
இந்த மாதம் மட்டும் 16 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறைக்கு அடுத்து, மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது வங்கித் துறைதான்.
கடந்த ஆண்டு லேஹ்மன் வங்கி திவாலானதைத் தொடர்ந்து இதுவரை 155 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 1992-ம் ஆண்டு நெருக்கடியின் போது 188 வங்கிகள் மூடப்பட்டதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், இன்னும் இரு மாதங்களில் அந்த எண்ணிக்கை தாண்டப்பட்டு விடும் என்று தெரிவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications