மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் விமானப் போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil

குறிப்பாக பிஸினஸ் கிளாஸ் பயணிகள் அதிக அளவு பயணிக்கத் துவங்கியிருப்பதால், விமான சேவை நிறுவன நிர்வாகிகளின் முகத்தில் புன்னகை தெரியத் துவங்கியுள்ளது.
கடந்த செப்டம்பரில் 0.9 சதவிகிதமாக இருந்த பிஸினஸ் கிளாஸ் பயணிகளின் வருகை, ஒரு மாதத்தில் 1.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல வருவாயிலும் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது. கிட்டத்தட்ட 4 சதவிகிதம் அளவுக்கு வருவாயில் உயர்வு காணப்படுவதாக இந்திய விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.
சர்வதேச அளவிலும் நேர்மறையான அறிகுறிகள் தெரியத் துவங்கியுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எகானமி மற்றும் எக்ஸிக்யூடிவ் வகுப்புகளில் 6 சதவிகித உயர்வு காணப்படுவதாக இச்சங்கம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications