இடைத்தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களில் தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்துக் கூறுகையில், திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் 80 சதவீதம் அளவுக்கு மேல் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
முடிவு பற்றி கேட்கிறீர்கள், இரு தொகுதிகளிலும், தி.மு.க அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெறும். புதிய சட்டமன்ற வளாகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.












Click it and Unblock the Notifications