பாகிஸ்தானுக்கு ரூ. 6000 கோடி கடன் தரும் ஐஎம்எப்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ 6000 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி நிறுவனம்.
உடனடி நடவடிக்கையாக இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 40 ஆயிரத்து 550 கோடி ரூபாய் நிதி வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல் அளித்தது. பாகிஸ்தானின் பொருளாதார செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த உதவி பல கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இதுவரை 26700 கோடி ரூபாய் பெற்றிருந்தது. இப்போது மேலும் ரூ 6000 கோடியைப் பெற்றுள்ளது.
இந்தத் தொகை முழுவதும் விரைவில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பில் சேர்க்கப்பட்டு விடும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் தனது நிதிப் பற்றாக்குறையை 4.9 சதவிகிதமாகக் குறைத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த கடனுதவியை வழங்குகிறது ஐஎம்எப்.












Click it and Unblock the Notifications