தேர்தல் கமிஷனை மதிக்கிறோம், சொல்கிறபடி செயல்படுவோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
பெங்களூர்: தேர்தல் கமிஷனை மதிக்கிறோம். அவர்கள் சொல்கிறபடி செயல்படுவோம். பென்னாகரம் தொகுதி மட்டுமல்ல, இதற்கு முன்பு நடந்த இடைத் தேர்தல்கள் குறித்தும் தேர்தல் கமிஷன் மாநில அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

பொங்கல் சமயத்தில் பென்னாகரத்தில் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று அதிமுக, பாமக கட்சிகள் கோரியுள்ளன. தேர்தல் ஆணையத்திற்குக் கடிதமும் எழுதியுள்ளன.

இதுகுறித்து பெங்களூர் வந்துள்ள முதல்வர் கருணாநிதியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது,

பென்னாகரம் இடைத்தேர்தலும் சரி, இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களும் சரி தமிழக அரசை தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை.

இப்போது பென்னாகரம் இடைத்தேர்தலையும் மாநில அரசை கலந்து ஆலோசித்து விட்டு தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை.

எங்களை பொருத்தமட்டில் தேர்தல் கமிஷன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் நாங்கள். தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+