தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திராவில் ஒரே மாதத்தில் ரூ.250 கோடி நாசம்
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா, ராயலசீமா மற்றும் எஞ்சிய ஆந்தர பகுதிகள் அனைத்திலும் தொடரும் போராட்டங்களால், போக்குவரத்து மற்றும் தொழில்கள் பாதிப்பை எல்லாம் கணக்கிட்டால், இழப்பு மேலும் பல நூறு கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் அதிகளவில் சேதாமடைந்திருப்பது தெலுங்கானா பகுதியே. ரூ.250 கோடி மதிப்பில் 80 சதவீதம் சொத்துக்கள் தெலுங்கானா பகுதிகளைச் சார்ந்தது.
கடந்த நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரையிலான 10 நாட்களில் மட்டும் தெலுங்கானா பகுதியில் பஸ்கள், அலுவலகங்கள் போன்ற 52 அரசாங்க சொத்துக்களும், 28 தனியார் சொத்துக்களும் தீ வைத்து முற்றிலும் கொளுத்தப்பட்டுள்ளன.
இதேபோல், அந்த 10 நாட்களில் மட்டும் இப்பகுதிகளில் 62 அரசு சொத்துக்களும், 114 தனியார் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications