நாகர்கோவில்: ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக் கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்ற இடத்தில் பிரபல ரெளடி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பூச்சிவிளாகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (27) என்ற இந்த ரெளடி 4 மாதங்களுக்கு முன் ராஜலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இவர் ஜாமீனி்ல் வெளியே வந்தார்.
இந் நிலையில் இன்று காலை ஈத்தாமொழி அருகே சாலையில் நடந்து சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. இதையடுத்து தப்பியோடிய இவரை அக் கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது.
இதில் உடல் முழுவதும் 35 இடங்களில் வெட்டுப்பட்ட ஜெயக்குமார் அதே இடத்தில் இறந்தார். கொலைக் கும்பல் தப்பியோடிவிட்டது.
கொலையான ஜெயக்குமார், சமீபத்தில் நடந்த போலீஸ் வேலைக்கான தேர்வு எழுதியுள்ளார். இவர் மீது பல அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் காலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications