சென்னைக் கடலில் எண்ணைக் கசிவு - குவியல், குவியலாக செத்து மிதக்கும் மீன்கள்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடலோர பகுதியில், கடலலைகள் கறுப்பு நிற எண்ணை கழிவுகளுடன் காணப்படுவதாலும், குவியல், குவியலாக மீன்கள் செத்துக்கிடப்பதாலும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
சென்னை, பாலவாக்கத்தை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் இருந்து முட்டுக்காடு வரை உள்ள கடலோர பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கறுப்பு நிறத்தில் எண்ணை கழிவுகள் கரையோரம் காணப்படுகிறது.
கடலுக்குள்ளும் பல கிலோ மீட்டர் தூரம் வரை இந்த எண்ணை கழிவுகள் பரவியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே மீன்களும் செத்து மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர். பல்வேறு இடங்களில் கரையோரத்திலும் மீன்கள் செத்துமிதக்கின்றன.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், '2 நாட்களாக கடல் அலைகளுடன் இதுபோல் எண்ணை கழிவுகள் வருகிறது. கெட்டுப்போன எண்ணை கழிவுகள் கப்பல்களில் இருந்து கொட்டப்பட்டு இருந்தால் இதுபோன்ற அலைகள் ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டோம்.
புத்தாண்டு விடுமுறை நாட்கள் என்பதால் என்னவோ எந்த அதிகாரியும் இதுவரை வந்து பார்க்கவில்லை. சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் இந்த எண்ணை படிவங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications