சாலமன் தீவில் நிலநடுக்கம்-சுனாமி உருவானது

அந் நாட்டு நேரப்படி இன்று காலை 8.48 மணிக்கு ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகள் அளவுக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 9.36 மணிக்கு 7.2 ரிக்டர் அளவுக்கு அதைவிட பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இதையடுத்து 0.2 மீட்டர் அளவுக்கு சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன. பிஜி உள்பட அருகாமையில் உள்ள சிறிய தீவுகளை இந்த சுனாமி அலைகள் தாக்கின. ஆனால், இதனால் சேதம் ஏதும் இல்லை.
கடந்த 2007ம் ஆண்டில் இப்பகுதியில் 8.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் தாக்கி கிஸோ நகர் கடுமையாக பாதிப்படைந்ததும், இதில் 50 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில்...:
மெக்சிகோவின் மெக்சிகலி நகரில் இருந்து 19 மைல் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.1 என பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சான்டீகோ, மெக்சிகலி ஆகிய நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டது. ஆனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications