ஊட்டி-குன்னூர் சாலை போக்குவரத்து மீண்டும் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: இரண்டு மாதங்களாக தடைபட்டிருந்த குன்னூர்-ஊட்டி இடையிலான சாலை போக்குவரத்து இன்று மீண்டும் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்தன. இதனால் மேட்டுப்பாளையம், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் குன்னூரிலிருந்து காணிக்கராஜ் நகர் வரையும், பெரிய பிக்கட்டியிலிருந்து எல்லநள்ளி, அச்சனக்கல், லவ்டேல் வழியாகவும் ஊட்டிக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிந்தாலும், லவ்டேல், அச்சனக்கல் வழியாகவே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஊட்டி-குன்னூர் வழித்தடத்தில் அரசு பஸ் மற்றும் கன ரக போக்குவரத்தை தமிழக கதர்வாரிய அமைச்சர் ராமசந்திரன் ஊட்டி லவ்டேல் சந்திப்பிலிருந்து போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்பு போக்குவரத்து சீரடைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+