பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்-மாணவர்கள் பீதி
அம்பை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளியில் இன்று காலை வழக்கும் போல வகுப்புகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அலுவலக அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசியவர் உங்கள் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அரை மணி நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் பள்ளியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக அனைத்து மாணவ, மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு வெளி்யேற்றப்பட்டனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் அது பொய் தகவல் என தெரிய வந்தது. போனில் பேசிய நபரின் குரல் சிறுவனின் குரல் போல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications