நான் ரொம்ப பாதுகாப்பாக இருக்கிறேன்: எஸ்.வி.சேகர்

அவர் பேசுகையில், முதன் முறையாக ஆளுனர் உரையை முழுமையாக கேட்கும் வாய்ப்பை ஆண்டவனும், ஆளுபவரும் எனக்குத் தந்திருக்கிறார்கள். அதற்கு நன்றி. துஷ்டனை கண்டால் தூர விலகு. சேரும் இடம் அறிந்து சேர் என்று என் அப்பா சொல்வார்.
நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. என்னை கட்டம் கட்டினாலும் என் ஜாதக கட்டம் நன்றாக இருப்பதால் நான் முன்பை விட பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன்.
எனது பிறந்த நாளுக்கு துணை முதல்வர் எனக்கு அல்வா கொடுக்காமல் பால்கோவா கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எந்த கட்சியை சேராதவராக இருந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, போன்ற திட்டங்கள் முதல்வர் கலைஞரை 6வது முறையாக முதல்வர் ஆக்கும்.
புதிய சட்டமன்ற கட்டிடத்தில் கலைஞருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்றார் சேகர்.












Click it and Unblock the Notifications