நெல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?-போலீஸ் ரெய்ட்
நெல்லை: நெல்லை பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையால் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர். இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர்.
நேற்று இவரது வீட்டுக்கு சேரன்மகாதேவி டி.எஸ்.பி தங்கதுரை, இன்ஸ்பெக்டர் அருள், சுத்தமல்லி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, மற்றும் போலீசார் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஷேக் அப்துல் கபூர் போலீசாரிடம் விளக்கம் கேட்டபோது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை நடத்துவதாக தெரிவித்தனர்.
சுத்தமல்லி கிளை தலைவர் அப்துல் ரகுமான் வீடு மற்றும் அங்குள்ள வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகப்படும் படி யாரும் சிக்கவில்லை.
ஷேக் அப்துல் கபூர் நெல்லையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது வீட்டில் இருந்து வெடிகுண்டுகளை இயக்க செய்யும் டிரன்ஸ்சிஸ்டர் உள்ளிட்ட கருவிகளை போலீசர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சேக் அப்துல் கபூர் கூறும்போது, 'என் மீதுள்ள பழைய வழக்குகளை வைத்து தீவிரவாதிகள் எனது வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு சோதனை நடத்தியுள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications