குறைகேட்காத பஞ். தலைவரை பூட்டிவைத்த மக்கள்
பண்ருட்டி: கடந்த மூன்று வருடங்களாக பொதுமக்கள் குறை கேட்க வராத ஊராட்சித் தலைவரை அவரது அறையில் பூட்டிவைத்து கண்டனத்தை வெளிப்படுத்தினர் பொதுமக்கள்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில், மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவியாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எஙகள் பகுதிகளில் சுகாதார வசதி இல்லை, தெருவிளக்கு வசதி இல்லை, கடந்த மூன்றாண்டுகளாக ஊராட்சி கூட்டம் நடத்தவில்லை என பல்வேறு புகார்களை அடுக்கினர்.
இதற்கு ஊராட்சிமன்றத் தலைவர் பதில் கூறாததால், ஆத்திரம் அடைந்த மக்கள், கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக் கதவை மூடி பூட்டு போட்டனர்.
பின்னர், கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை திறந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications