நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வென்றது
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், சிபு சோரன் தலைமையிலான அரசு 19 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிபு சோரனுக்கு ஆதரவாக 45 வாக்குகளும், எதிராக 26 வாக்குகளும் கிடைத்தன. ஜார்க்கண்ட் சட்டசபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 81 ஆகும்
ஐந்து ராஷ்டிரிய ஜனதாதள எம்.பிக்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.
அதேசமயம், ஜார்க்கண்ட் கட்சி உறுப்பினர் ஈனோஸ் எக்கா, காங்கிரஸ் உறுப்பினர் கோபால்நாத் சகாதியோ, மார்க்சிஸ்ட் கோஆர்டினேஷன் கமிட்டி என்ற கட்சியின் உறுப்பினர் அரூப் சாட்டர்ஜி, சுயேச்சை ஹரிநாராயணன் ராய் ஆகியோர் சபைக்கு வரவில்லை. .
வராத எம்.எல்.ஏக்களில் எக்கா மற்றும் ராய் ஆகியோர் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டிசம்பர் 27ம் தேதி சோரனை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் சங்கரநாராயணன் அழைப்பு விடுத்தார்ம. ஜனவரி 8ம் தேதிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து டிசம்பர் 30ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற சோரன், நேற்று பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார்.
சோரன் கட்சிக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 20 உறுப்பினர்கள், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனின் 5 பேர், ஜார்க்கண்ட் ஜனாதிகார் மஞ்ச் கட்சியின் ஒரு உறுப்பினர், ராஷ்டிரிய கல்யாண் பக்ஷ் கட்சியின் ஒரு உறுப்பினர், பிதேஷ் சிங் என்ற சுயேச்சையின் ஆதரவு சோரனுக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications