போலியோ சொட்டு மருந்து முகாம் - தொடங்கி வைத்தார் முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இன்றும் அடுத்த மாதம் 7ம் தேதியும் 2 கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.

இந்த முகாமை இன்று காலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஒரு குழந்தைக்கு வாயில் சொட்டு மருந்தை கொடுத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.

சிறப்பு மையங்கள்...

சொட்டு மருந்து வழங்குவதற்காக 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதர நிலையங்கள், சத்து ணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற் கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவ மனைகளில் முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரி சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள். சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட தற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+