மார்ச் 13ல் புதிய சட்டசபை திறப்பு விழா

இந்த சட்டசபையில் தான் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
சமீபத்தில் கோட்டையில் உள்ள சட்டசபையில் நடந்த கூட்டத் தொடர் தான் அங்கு நடத்தப்பட்ட கடைசி சட்டமன்றத் தொடராகும். அடுத்த தொடர் புதிய வளாகத்தில் தான் நடக்கவுள்ளது.
வீடியோகான் ஆலை-ஸ்டாலின் ஆலோசனை:
இந் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1600 கோடியில் அமையவுள்ள வீடியோகான் ஆலை குறித்து அந்நிறுவன அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் 70 ஏக்கர் நிலத்தில் இந்ச ஆலை அமையவுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வீடியோகான், எலக்ட்ரோலக்ஸ், கெல்வினேடர், அகாய், கென்ஸ்டார் ஆகிய பெயர்களில் மின்சார, மின்னணு பொருட்களை வீடியோகான் இங்கு தயாரிக்கும்.
மேலும் எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா கலர் டி.வி.க்கள், செல்போன், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றையும் யூனிடி அப்ளையன்சஸ் என்ற புதிய துணை நிறுவனம் மூலம் வீடியோகான் தயாரிக்கவுள்ளது.
இந்தப் பொருட்களும் மானாமதுரை ஆலையில் தயாரிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications