ரவுடி சகவாசம் கொண்ட போலீசார் மீது நடவடிக்கை: டிஜிபி உறுதி
மதுரை: குற்றவாளிகளுடன் தொடர்புடைய போலீசார் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் கூறியுள்ளார்.
இதுகுறித்து லத்திகா சரண் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குற்றங்களில் ஈடுபடும் போலீசார் குறித்து மாவட்டக் கண்காணிப்பாளர்கள் மூலம் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் அளிக்கும் புகார்கள் குறித்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மட்டுமின்றி அனைத்து போலீஸ் நிலையத்திலும் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வழக்குப் பதிவதில் தாமதம் கூடாது.
சில புகார்களை விசாரித்த பின்னர் தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் புகார்தாரர்கள் அவசரப்பட்டு குழப்பமடைகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் ஆம்புலன்சுகள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது' என்றார்.
முன்னதாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி லத்திகா சரண் ஆலோசனை நடத்தினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications