மெக்சிகோ சிறையில் கலவரம்: 23 கைதிகள் சாவு
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் கைதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் உள்ள டுராங்கோ மாகாணத்தில் டோரியான் நகருக்கு அருகே உள்ள செரிசோ சிறையில் நேற்று காலை திடீரென கைதிகளுக்கு இடையே கலவரம் மூண்டது.
சிறைச்சாலைக்குள் கைதிகள் இருபிரிவனர் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறை காவலர்களும், போலீசாரும் தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கலவரத்தில் 23 கைதிகள் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலவரத்துக்கான காரணம் குறித்து சிறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
சிறைக்குள் கோஷ்டியாக செயல்படும் இருபிரிவினர் தங்களுக்குள் அடித்துக் கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications