தமிழகத்தில் மர்மக்காய்ச்சல்-ஆராய டெல்லி குழு வருகை

தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 மாதமாக சிக்குன்குனியா, டெங்கு, எலி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல், கை-கால் வலி, உடம்பு வலி, மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த காய்ச்சல் என்ன விதமானது, எதனால் பரவுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெல்லியில் இருந்து மருத்துவக் குழு சென்னை வந்துள்ளது.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குனர் டாக்டர் ஜெகவீர்சிங் தலைமையில் 4 பேர் கொண்ட இக்குழு, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை மாவட்டத்திலும் சனிக்கிழமை நெல்லை மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.
கடையநல்லூர், மேலப்பாளையம், நெல்லை மாநகராட்சியில் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் சென்று ரத்த மாதிரிகளை சேகரித்து ஆராய உள்ளார்கள்.
மர்ம காய்ச்சல் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ கூறுகையில், தமிழகத்தில் ஒரு தனிவிதமான காய்ச்சல் உள்ளது உண்மை தான். இதற்கு எலி காய்ச்சல், சிக்குன்குனியா, டைபாய்டு, டெங்கு என பல தரப்பட்ட நோய் அறிகுறி தென்படுவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் முடிவுகள் தெரியவரும்.
மற்றபடி, 2 வாரத்திற்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகம் கோணலாகிவிடும் எனக் கூறப்படுவதெல்லாம் வெறும் வதந்தி என்றார்.












Click it and Unblock the Notifications