மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் பாக்.கை இந்தியா தாக்கலாம்-யுஎஸ்

Subscribe to Oneindia Tamil

Robert Gates with Manmohan Singh
டெல்லி: மீண்டும் மும்பைத் தாக்குதலைப் போல ஒன்று நடந்தால் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.

டெல்லி வந்துள்ள ராபர்ட் கேட்ஸ், பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு. மும்பை தாக்குதலைப் போன்ற ஒன்று மீண்டும் நடந்தால் நிச்சயம் இந்தியா அமைதியாக இருக்காது. இந்திய, பாகிஸ்தான் ராணுவத்திற்கிடையே மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன.

இப்பிராந்தியத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க அல் கொய்தாவுடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா செயல்பட்டு வருகிறது. அதை அந்த அமைப்பு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து நாடுகளும் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராட வேண்டும். லஷ்கர் இ தொய்பா, தலிபான், தெஹரிக் இ தலிபான், அல் கொய்தா ஆகியவற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்த போர் தொடுக்கப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்த அமைப்புகள் மிகவும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது கவலை தருகிறது. இதனால் அந்தப் பகுதி மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்திற்கே மிரட்டல் நிலவுகிறது.

அல்கொய்தா அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் கை கோர்த்து செயல்படுகின்றனர். தெஹரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானை சீர்குலைக்க முயன்று வருகிறது என்றார் கேட்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+