புதிய தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75% பணி- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தமிழகத்தில் தொடங்கப்பட்டு வரும் தொழிற்சாலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் சந்திப்பு சாலையில் உள்ள சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அசோக் லேலண்ட் மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அல்டீம் நிறுவனம் சார்பில் 20 ஏக்கர் பரப்பில் உயர்ரக அலுமினிய வார்ப்படங்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிற்சாலையை நேற்று தொடங்கி வைத்தார். ஆஷ்லி அல்டீம்ஸ் நிறுவன தலைவர் ஷேஷசாயி, பின்லாந்து தகவல் தொடர்பு அமைச்சர் சுவிலிண்டன், தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், 'தமிழக அரசின் வெளிப்படையான அணுகுமுறை, உயர்ந்த உள்கட்டமைப்பு, குறைந்த உற்பத்தி செலவு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது.

தேசிய அளவில் 3வது இடத்திலும், பொருளாதார மண்டலத்தில் 3வது இடத்திலும் தமிழகம் இருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் தி.மு.க அரசில் தொழில்துறை சார்ந்த 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொழில்துறையில் ரூ.46 ஆயிரத்து 91 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 22 ஆயிரத்து 569 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மேலும் 12 ஒப்பந்தங்கள் பரிசீலனையில் உள்ளன.

அனைத்து புதிய ஆலைகளிலும் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.

தற்போது இந்த தொழிற்சாலையில் முதல் கட்டமாக ரூ.132 கோடி முதலீடு செய்யப்பட்டு 125 பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி முதலீடு செய்யப்பட்டு 500 பேருக்கு வேலை தரப்பட உள்ளது. இந்த ஆலை மூலம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் டன்கள் அலுமினிய வார்ப்படங்கள் தயாரிக்கப்பட உள்ளன' என்றார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிப்காட் தொழில் வளாகத்தில், ரூ. ஒரு கோடியே 77 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலையையும் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+