தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மேனன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்த எம்.கே.நாராயணன் மேற்குவங்க ஆளுநராகிறார். இதைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரான சிவசங்கர மேனனை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் மத்திய அரசு நியமித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியவற்றை இணைப்பதால் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேனன் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications