சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2ம் இடம்: அமைச்சர்

இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை கிளை சார்பில் இந்தியா இங்கிலாந்து தொழில் வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக கருத்தரங்கு கோவையில் நடந்தது.
தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை கருத்தரங்கில் பேசுகையில், தமிழகத்தில் 73.45 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்று உள்ளனர். அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது இது 62.66 சதவீதமாக உள்ளது.
இதில் 44 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிக்கின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 5ம் இடம் ஆகும்.
தொழில்நுட்ப கல்வி தமிழகத்தில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவ மாணவிகள் தொழில்நுட்ப கல்வி பெறுகின்றனர்.
தொழில் தொடங்க ஏற்ற நகரமாக கோவை 15 வதுஇடத்தில் உள்ளது. அதனால் தான் சர்வதேச நிறுவனங்கள் கோவையில் கால் பதித்து வருகின்றன.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக மென்பொருள் ஏற்றுமதி ரூ.50 கோடியாக இருந்தது. 2008-09ம் ஆண்டு ரூ.373 கோடியானது.
மென்பொருள் மட்டும் இல்லாமல் பம்பு செட் உற்பத்தியிலும், கோவை முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்த 350 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர கோவை உள்ளிட்ட 11 நகரங்களில்தொழில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.675 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மென் பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications