ஜி.டி, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை - டெல்லி இடையிலான கிராண்ட் டிரங்க் (ஜி.டி) மற்றும் தமி்ழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன் ஜோடி ரயில்கள் தாமதமாக வருவதால் இந்த நேரம் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண் 2615 சென்னை சென்டிரல் - புது டெல்லி இடையிலான ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 7.15 மணிக்குப் பதிலாக 8.15 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல, ரயில் எண் 2621 சென்னை சென்டிரல் - புது டெல்லி இடையிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 10 மணிக்குப் பதில், நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications