ஹோட்டல் அதிபர் கொலை-ரூ.8 லட்சம் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளை அணிந்திருந்த ஹோட்டல் அதிபரை வெட்டிக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, எண்ணூர் சாஸ்திரி நகரில் வசித்து வந்தவர் ஜெயசிங் (52). எர்ணாவூர் மற்றும் சத்தியமூர்த்தி நகரில் ஹோட்டல்கள் நடத்தி வந்தார்.

இன்று காலை எண்ணூர் அனல்மின் நிலையம் எதிரே ஜெயசிங் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.

நேற்று இரவு ஹோட்டலில் இருந்த வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் அவரை வெட்டிக் கொன்று நகைகளை கொள்ளையடித்ததாகத் தெரிகிறது.

ஜெயசிங் எப்போதும் ஏராளமான நகைகள் அணிந்திருப்பாராம். 22 பவுனில் செயின், 11 பவுன் மெகா பிரேஸ்லெட், ரூ. 2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம், அரை கிலோ வெள்ளிக் கொடி ஆகியவற்றை ஜெய்சிங் அணிந்திருப்பாராம்.

ஜெய்சிங் பிணமாக கிடந்தபோது சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான இந்த நகைகள் அவரது உடலில் இல்லை. இதனால் நகைக்காக அவர் செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்துக்காக கொன்றுவிட்டு நகைகளையும் கொள்ளையடித்துள்ளனா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயசிங்கின் முதல் மனைவி ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. 15 வயது வளர்ப்பு மகள் தான் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் 16 வயதே ஆன பெண் ஒருவரை ஜெயசிங் 2வது திருமணம் செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+