செலவு கணக்கு-3,907 பேர் தேர்தலில் போட்டியிட தடை!
பெரம்பலூர்: செலவு கணக்கு காட்டாமல் உள்ளாட்சிப் பதவிகளில் இருந்துவரும் 3 ஆயிரத்து 907 பேர், 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நிருபர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், '2006 அக்டோபரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை செலவு கணக்கு காட்டாத 3 ஆயிரத்து 907 பேருக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போய் சேராத நிலை உள்ளது.
ஆனால், தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் நடத்தப்பட்டுள்ள இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் எவ்வித குளறுபடிகளும் நேரவில்லை.
இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications