சென்னையில் மலேசியப் பிரதமர் ரஸ்ஸாக்
சென்னை: மலேசியப் பிரதமர் முகம்மது நஜீப் பின் துன் அப்துல் ரஸ்ஸாக் சென்னைக்கு வந்துள்ளார். அவரை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
நேற்று இரவு தனது மனைவி ரோஸ்மா மன்சருடன் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ரஸ்ஸாக் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக குழு வரவேற்றது.
இதையடுத்து ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் ரஸ்ஸாக். அங்கு அவருக்கு இரவு விருந்தளித்து ஆளுநர் பர்னாலா கெளரவித்தார்.
இன்று சென்னையில் நடைபெறும் சில வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் ரஸ்ஸாக்.
சென்னைக்கு மலேசியப் பிரதமர் ஒருவர் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதிர் முகம்மது அதிகாரப்பூர்வமற்ற முறையில் சென்னை வந்து எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். மகாதிர் முகம்மதுவின் தந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுலுடன் சந்திப்பு:
முன்னதாக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த ரஸ்ஸாக், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications