பிரபாகரனின் உடல் என இலங்கையால் காட்டப்பட்டவர் இவரா?
கடந்த ஆண்டு மே 18ம் தேதி நடந்த இறுதிப் போரின்போது பிரபாகரன் தப்பி ஓட முயன்றார். ஆனால் எங்களது ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர் என்று கூறியது இலங்கை அரசு. இதையடுத்து உடல் மீட்கப்பட்டதாக பின்னர் கூறி உடலையும் காட்டியது.
ஆனால் இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது நிச்சயம் பிரபாகரனே இல்லை என்று ஈழ அபிமானிகள் திட்டவட்டமாக கூறினர். இதுதொடர்பாக இன்னும் சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந் நிலையில் சிங்கள ராணுவத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு ராணுவ வீரர் சக வீரர்களுடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த வீரர் அப்படியே சாட்சாத், பிரபாகரன் உடல் என்று இலங்கை ராணுவம் வெளியிட்ட உடலின் உருவத்துடன் ஒத்துப் போகிறார்.
இந்த வீடியோவை தமிழ்வின் இணையம் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வீடியோவால் பிரபாரகரன் குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.













Click it and Unblock the Notifications