திருச்சி-வகுப்பறையில் பேராசிரியர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஓய்வு பெற சில மாதங்களே இருந்த நிலையில் திருச்சி ஈ.வே.ரா அரசினர் கல்லூரி பேராசிரியர் அருணகிரிநாதர் என்பவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சியில் ஈ.வே.ரா அரசினர் கல்லூரி உள்ளது. இங்கு கணிதத்துறை பேராசிரியராக இருந்தவர் அருணகிரிநாதர். 58 வயதை எட்டியுள்ள இவர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். கரும்பலகையில் மோதி கீழே விழுந்த அவரை மாணவர்களும், பேராசிரியர்களும் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.
ஆனால் ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications