காஸா போர் பாதிப்பு- ஐநாவுக்கு 1 கோடி டாலர் இழப்பீடு தந்த இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
ஐ.நா: காஸா போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஐ.நா. சபைக்கு ஒரு கோடி அமெரிக்க டாலரை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
கடந்த 2008 டிசம்பர் மாதம் முதல் 2009 ஜனவரி வரை காஸாவில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது கடும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடுத்தது.
காஸாவில் பாலஸ்தீனிய குழந்தைகளுக்காக ஐ.நா சார்பில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் சரக்கு குடோன்களும் தாக்கி அழிக்கப்பட்டன.
இத் தாக்குதலினால், குடோன்களில் இருந்த நூற்றுக்கணக்கான டன் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் நாசமாகி ஐ.நா.வுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
இதற்காக இழப்பீடு தொகை தரவேண்டும் என ஐ.நா உத்தரவிட்டது. இதையடுத்து, போர் நடந்த ஓராண்டுக்கு பின்னர் தற்போது ஐ.நா.வுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10.5 மில்லியன் அமெரிக்க டாலரை இஸ்ரேல் செலுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications