ஹெட்லி புகைப்படம் வெளியீடு-ராணாவுடன் ஒரே லாக்கப்பில்
சிகாகோவில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மும்பைத் தாக்குதலில் இவர்கள் இருவருக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது.
இருவரும் தற்போது சிகாகோ சிறையில் ஒரே லாக்கப்பி்ல் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிகாகோ தகவல்கள் கூறுகையில், இருவரும் சிகாகோ பெருநகர சீர்திருத்த மையத்தில் ஒரே லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவோ, பேசிக் கொள்ளவோ இல்லை.
இருவரும் சந்திப்பதை தவிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. சாப்பிடும்போது கூட ஒரே பகுதிக்கு வருவதை இருவரும் தவிர்த்து விடுகிறார்கள் என்றனர்.
ராணாவும், ஹெட்லியும், இளமைப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் பாகிஸ்தான் ராணுவப் பள்ளியில் சேர்ந்து படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இமிகிரேஷன் நிறுவனத்தை நடத்துமாறு ராணாவை ஊக்குவித்து உதவியவர் ஹெட்லிதான். இதன் மூலம் இந்தியா, டென்மார்க் நாடுகளுக்குப் போய் வருவது குறித்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருவரும் பார்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 14ம் தேதி இருவருக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்புண்டு என்று சிகாகோ கோர்ட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்.
ஹெட்லியின் புகைப்படம் வெளியீடு...
இந்த நிலையில் ஹெட்லியின் உண்மையான முகத்தை முதல் முறையாக எப்.பி.ஐ அதிகாரிகள் இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை இந்தியாவிடம் எப்.பி.ஐ முதல் முறையாக வழங்கியுள்ளது.













Click it and Unblock the Notifications