நடிகையுடன் தொடர்பு-டிவி நடிகர் மீது மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

Vishwa
சென்னை: தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், எந்த நேரமும் அவருடனேயே சுற்றுவதாகவும், இதனால் வீட்டைப் பூட்டி விட்டு தனது தந்தை வீட்டுக்குப் போய் விட்டதாகவும் போலீஸில் கூறியுள்ளார் பிரபல டிவி நடிகர் விஸ்வாவின் மனைவி பிரியா.

டிவி நாடகங்களில் பிரபலமான நடிகர் விஸ்வா. டிவி நடிகர், நடிகையர்களுடன் பல்வேறு நாடுகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும் போய் வருகிறார்.

இவருக்கு போரூர் கார்டன் பகுதியில் வீடு உள்ளது. இவரது மனைவி பிரியா. தாம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள். காதல் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு 4 வயது மகன் உள்ளான்.

சமீப காலமாக விஸ்வா- பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விஸ்வா வீட்டை விட்டு வெளியேறினார். பிரியாவும் தனது வீட்டைப் பூட்டி விட்டு தந்தை வீட்டுக்குப் போய் விட்டார்.

இதையடுத்து மதுரவாயல் போலீஸில் புகார் செய்தார் விஸ்வா. அதில், படப்பிடிப்பு உபகரணங்கள், பாஸ்போர்ட், ரேசன்கார்டு, பான்கார்டு, இமெயில் கணக்கு அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வீட்டிற்குள் இருப்பதாகவும் அவற்றை எடுக்கவிடாமல் வீட்டை பூட்டி விட்டு பிரியா தனது தந்தையுடன் தாம்பரத்தில் தங்கி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் பிரியாவை அழைத்து விசாரித்தனர்.

போலீஸாரிடம் பிரியா கூறுகையில்,

எனது தந்தையிடம் பணம் வாங்கிதான் வீடு கட்டினோம். வீட்டின் பெயரில் ரூ.27 லட்சம் கடன் உள்ளது. விஸ்வா ஒரு நடிகையுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். சரியாக வீட்டிற்கு வருவதில்லை.

அந்த நடிகையுடனேயே ஊதாரித்தனமாக சுற்றி வருகிறார். இந்த வீடு கட்டியதில் அவரது பங்கு ஒன்றும் இல்லை. எனவே வீட்டை அவரிடம் ஒப்படைக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

இதையடுத்து சொத்து சம்பந்தமான சிவில் வழக்கில் போலீசார் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறி தலையிட மறுத்து விட்டனர்.

இதையடுத்து கோர்ட்டில் பார்த்துக் கொள்வதாகக் கூறி இருவரும் கிளம்பிச் சென்றனர்.

இதையடுத்து விஸ்வா, விவாகரத்து கோரி குடும்ப கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று புறநகர் கமிஷனர் அலுவலகம் வந்த விஸ்வா, பிரியாவிடம் இருந்து வீட்டை மீட்டு தரக்கோரி புதிதாக புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

மேலும் தனது புகாரில், அமெரிக்காவில் உள்ள மைத்துனர், தனது இமெயில் முகவரிக்குள் நுழைந்து தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மெயில் அனுப்பி, தன்னுடன் இனி்மேல் பிசினஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என செய்தி அனுப்பியிருப்பதாகவும் விஸ்வா கூறியுள்ளாராம்.

விஸ்வாவும், அவரது மனைவி பிரியாவும் இணைந்து காஸ்மெடிக் டவுன் என்ற பெயரில், திரையுலகுக்குத் தேவைப்படும் வேதிப் பவுடரை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+