டீக்கடை நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தையே முதல்வராக்கியவர் ஜெ. - ராமராஜன்
கோபி: டீக்கடை வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வத்தையே முதல்வராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
ஈரோடு புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் அ.தி.மு.க. வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடைபெற்றது.
முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ராமராஜன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, கோபிசெட்டி பாளையத்தை மறக்க முடியாது. பி.எஸ்.வீரப்பா தயாரித்த மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தை டைரக்ட் செய்தவன் நான். அதன் பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னனி நடிகனாக திகழ்ந்தேன்.
தமிழ் மொழிக்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளார்கள். முதலமைச்சர் கருணாநிதி என்ன தியாகம் செய்தார்?.
டீ கடை வைத்திருந்த பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. கருணாநிதி செய்தாரா? மக்கள் வரிப் பணத்தில்தான் இலவச டி.வி. தருகிறார்கள்.
டாஸ்மாக்கை, மணல் டெண்டர் போன்ற திட்டங்களை கொண்டு வந்து அவர்கள் வருமானத்தை பெருக்கியவர் ஜெயலலிதா தான். தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன?.
அ.தி.மு.க. ஆட்சியில் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டப்பட்டது. பொய்யான வாக்குறுதியை அளித்து வருவது தி.மு.க. ஆட்சிதான். இந்த ஆட்சியில் தொடர் மின்வெட்டு உள்ளது. மீண்டும் அ.தி.மு.க. வந்தால் இந்த நிலை நீடிக்காது.
சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. விலைவாசி குறைய வேண்டுமானால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்றார் ராமராஜன்.












Click it and Unblock the Notifications