மும்பையில் 2 தீவிரவாதிகள் ஊடுருவல்-உஷார் நிலை!
மும்பை: மும்பையில் இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த உளவு தகவலை அடுத்து பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் டாக்சி டிரைவர்கள் வேஷத்தில் மும்பையின் பல பகுதிகளை வேவு பார்த்து பின்னர் தாக்குதலை நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் மும்பையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் தீவிரவாதிகளின் பெயர் மற்றும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உளவுத் துறைக்கு தெரிந்துள்ளது.
ஆனால் போலீசாரின் சோதனை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனால் மும்பை முழுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். ஹோட்டல், லாட்ஜ் போன்ற இடங்களில் தங்கியிருப்பவர்களின் முழு
விவரங்களும் சரிபார்க்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.
அதேபோல் மாநகர் முழுவதும் ஓடும் டாக்சி டிரைவர்களை போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நிறுத்தி சோதனை நடத்திய வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications