போதை பொருள்-மலேசியாவில் இந்தியருக்கு மரண தண்டனை
கோலாலம்பூர்: போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக 48 வயது இந்தியருக்கு மரணதண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆதிசேஷன் சிங்காரம் என்ற 48 வயது இந்தியர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் போதைப் பொருள் கடத்தி வந்ததாகக் கூறி கடந்த 2008ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு மலேசிய ஐகோர்ட்டில் நடந்துவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மலேசிய ஐகோர்ட் நீதிபதி முகமது யாசித் முஸ்தஃபா தீர்ப்பளிக்கையில், 'ஆதிசேஷன் 25 கிலோ கேட்டமைன் போதை பொருளை கடத்தியது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் பலமுறை தெரிந்தே இந்த தவறை தொடர்ந்து செய்துவந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. எனவே ஆதிசேஷனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது' என குறிப்பிட்டார்.
முன்னதாக விசாரணையின் போது ஆதிசேஷன் தனது லக்கேஜில் போதைப் பொருள் இருப்பது தனக்கு தெரியவே தெரியாது எனக் கூறினார்.
ஆனால், சாட்சியங்களையும், ஆதாரங்களையும் ஆய்ந்து பார்த்தால் அப்படி தெரியவில்லை எனக்கூறி அவரது வாதத்தை நிராகரித்துவிட்டார் நீதிபதி.












Click it and Unblock the Notifications