ஹெராயின் வழக்கு-ஜெ. மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் சரண்!
சென்னை: போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்காள் மகனுமான சுதாகரன், கோர்ட்டில் சரணடைந்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு தனது வீட்டில் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார் சுதாகரன் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
சுதாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தோட்டம் பாஸ்கரன், மொய்னுதீன், ஜலாலுதீன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுதாகரன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து நீதிபதி நாகராஜன் ஜாமீனில் வெளியே, வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரன் நீதிபதி நாகராஜ் முன்பு சரண் அடைந்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி, அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்தார். வழக்கு விசாரணை நடைபெறும் போது சுதாகரன் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.












Click it and Unblock the Notifications