சென்னையில் மேலும் ஒரு பண மோசடி - மக்கள் தவிப்பு - புகார்
சென்னை: சென்னையில் மீண்டும் பண மோசடிகள் தலை விரித்தாடத் தொடங்கியுள்ளன. பணத்தை முதலீடு செய்தால் 5 மடங்கு பணம் தருவதாக கூறி ஒரு நிறுவனம் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் மிகப் பெரிய அளவில் மோசடி செய்த ஜேபிஜே ரியல் எஸ்டேட் நிறுவனம் போலீஸ் வலையில் சிக்கியது. இந்த நிலையில் பணம் முதலீடு செய்தால் அதை விட 5 மடங்கு பணம் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த இன்னொரு நிறுவனம் சிக்கியுள்ளது.
எழும்பூர் மாண்டியத் சாலையில், எம்.எல்.சி. என்ற பங்கு முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ. ஒன்றரை லட்சம் கட்டினால் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரத்து 178 வீதம் 60 மாதங்கள் வரை திருப்பித் தருவோம் என்று பத்திரிகைகளில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது.
இதை உண்மை என நம்பி கொளத்தூர் 2-வது தெருவை சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி கனகவல்லி, பாலகுரு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.1 1/2 லட்சம் கட்டினர். அப்போது அந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டிய செக்குகளை முன்கூட்டியே அவர்களுக்கு வழங்கியது.
இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் கட்டிய பணத்திற்கு 5 மடங்கு திருப்பி கிடைத்து விட்டதாக கருதி குஷியாக இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் செக்கை வங்கியில் செலுத்திய போது எம்.எல்.சி. நிறுவன கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் அளித்த புகாரில் 100-க்கும் மேற்பட்ட மக்களிடம் 5 மடங்கு பணம் தருவதாக கூறி எம்.எல்.சி. நிறுவனம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோசடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளதாம். இந்த நிறுவன மோசடி குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications