ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து - 30 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் காயமடைந்தனர்.

ஹைதராபாத்தின் சோமாஜிகுடா பகுதியில் பார்க் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து உள்ளே இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் தீவிபத்தி்ல் சிக்கி நோயாளிகள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 30 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து 8 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+