ரயில்வே காலியிடத்தில் மருத்துவமனை: 600 இடங்களில் ஆய்வு
செங்கோட்டை: ரயில்வே மற்றும் மத்திய சுகாதார துறை இணைந்து காலியாக உள்ள ரயில்வே நிலத்தில் மருத்துவமனை கட்ட முடிவெடுத்துள்ளன.
செங்கோட்டை உள்பட நாடு முழுவதும் 600 இடங்களில் இதற்காக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள, தமிழகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்கும் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கனக்கானோர் வந்து செல்கின்றனர்.
இங்கு ரயி்ல்வேக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கும் அதிகமாக இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் ரயில்வே மருத்துவமனை கட்ட வேணடும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுருத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஆகியோர் ரயில்வே நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக இரண்டு உயர் அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை உள்பட இந்தியா முழுவதும் இதுபோன்று 600 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் பொருத்தமான இடங்களை தேர்வு செய்து அங்கு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும். இதில் நிலத்தை ரயில்வே துறை வழங்கினாலும், மருத்துவமனை மத்திய பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும்.
கட்டிடம் கட்டும் பொறுப்பை மத்திய சுகாதார துறையையே ஏற்கும். அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications