இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது வேலைவாய்ப்பு

அன்டால் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, வருகிற காலாண்டில் மட்டும் 30 நாடுகளைச் சேர்ந்த 6000 பெரிய நிறுவனங்களில் மீண்டும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் வேகம் பிடித்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை 71 சதவிகித நிறுவனங்கள் மீண்டும் தங்கள் மனித வளத்தை உயர்த்துவதில் மும்முரம் காட்டுகின்றன.
இன்னொரு சுவாரஸ்யம், மிகவும் பின்தங்கிய நாடு எனக் கருதப்பட்ட நைஜீரியாவில் இந்தியாவை விட அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவாம். இங்கு 79 சதவிகித நிறுவனங்கள் புதிய பணியாளர்கள் நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளனவாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மிகவும் நம்பிக்கையுடன் நிறுவனங்கள் ஆளெடுப்பு வேலையில் இறங்கியுள்ளன.
சீனாவிலும், பாகிஸ்தானிலும் கூட 70 சதவிகிதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு வளர்ச்சி காணப்படுகிறதாம்.
குறிப்பாக ஆட்டோமொபைல், ஐடி, பார்மாசூடிகல்ஸ் துறையில்தான் பெருமளவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்கிறது அன்டால் இன்டர்நேஷனல் அமைப்பு.
"மீண்டும் அறிவு வேட்டை ஆரம்பித்துள்ளது. இதை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார் இந்நிறுவனத்தின் சிஇஓ டோனி குட்வின்.












Click it and Unblock the Notifications