கோவையில் மீண்டும் 'கிட்னி' மோசடி - ரூ.7 லட்சத்துக்கு விலை போன சிறுநீரகம்!

தமிழகத்தில் சிறுநீரகங்கள் கள்ளச் சந்தையில், பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு மருத்துவரோ, மருத்துவமனையோ இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுமார் 15 மருத்துவமனைகளில் சிறுநீரக வியாபாரம் நடந்ததாகக் கூறி மாநில சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த மருத்துவமனைகளின் உரிமங்களை திரும்பப்பெற்றது.
அந்த மருத்துவமனைகளில் ஒன்றான கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஆய்வு நிறுவனத்தில் தற்போது மீண்டும் சிறுநீரக வியாபாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு சமீபத்தில் ஒரு சிறுநீரகம் ரூ.7 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டப்படி தகுந்த உரிமம் இல்லாத மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை உள்பட எதையும் மேற்கொள்ள முடியாது. மேலும், மாற்றப்படும் உறுப்புக்கு எந்தவிதமான பணப் பரிமாற்றமும் நடக்கக் கூடாது என்பதையும் மருத்துவமனை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
ஆனால் ஏற்கனவே உரிமம் பறிக்கப்பட்ட கோவை மருத்துவமனையில் இந்த சட்டமீறல் மீண்டும் அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 'இதுபோன்ற குற்றங்களை நிரூபிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
சட்டப்படியான ஆவண ஆதாரங்கள் கிடைப்பதில்லை. பல சமயங்களில் சாட்சிகள் பல்டி அடித்துவிடுவார்கள். இதனால் மருத்துவமனைகள் தண்டனையில் இருந்து தப்ப பல வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும், சில மருத்துமனைகள் அரசாங்க அதிகாரிகளிடம் கை கால்களில் விழுந்து மீண்டும் இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் எனக் கூறி எப்படியாவது உரிமத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்' என்று கூறினர்.
இதனால், தற்போது இந்த சிறுநீரக மோசடி விவகாரம் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கொண்ட தனி குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications