நவிபத்தில் கணவன், மனைவி பலி: நகை மீது ஆர்வம் காட்டிய போலீஸ்!
நெல்லை: மேலப்பாளையம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் கணவன்-மனைவி பலியாகினர்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவர் நேற்று தனது மனைவி ராஜலெட்சுமியுடன் நெல்லையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
மேலப்பாளையம் அடுத்த முன்னீர்பள்ளம் டாஸ்மக் குடோன் அருகே வரும்போது நெல்லையில் இருந்து பாபநாசத்திற்கு சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம அடைந்த இருவரும் சம்பவ இடத்திலையே இறந்தனர்.
விபத்தில் இறந்த ராஜலெட்சுமி நிறைய நகைகள் அணிந்திருந்தார். இறந்தவர்களது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் வந்தனர். அப்போது விபத்து சம்பவத்தை படமெடுக்க முயன்ற பத்திரிகைக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் ராஜலெட்சுமி அணிந்திருந்த நகைகளை உறவினர்கள் வரும்முன்பே தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கழற்றி வைத்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அந்த டிரைவர் அனைத்து நகைகளையும் கழற்றினார்.
விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் நகைகள் மாயமாகி வருவதாக புகார்கள் வரும் நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கை, நகைகளை பத்திரப்படுத்துவதற்காக அல்லது வேறு காரணத்துக்கா என அங்கிருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications