லைபீரியாவில் ஏற்பட்ட விபத்தில் அமைச்சர் வயலார் ரவி காயம்
டெல்லி: லைபீரியா நாட்டுக்குச் சென்றிருந்த மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி அங்கு ஏற்பட்ட கார் விபத்தில் காயமடைந்தார்.
மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி 9 நாள் ஆப்பிரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
வியாழக்கிழமை, லைபீரியாவின் மான்ரோவியா நகருக்கு சென்றிருந்த வயலார் ரவி அங்கிருந்து நைஜீரியாவின் லாகோஸ் நகருக்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்குக் காரில் போய்க் கொண்டிருந்தார்.
அவருடன், ஐவரி கோஸ்ட்டுக்கான இந்தியத் தூதர் ஷம்மா ஜெயினும் உடன் சென்றிருந்தார்.
அப்போது வழியில் வேகமாக வந்த டாக்சி ஒன்று, அமைச்சர் சென்ற கார் மீது மோதி விட்டது. இதில் ரவி, ஜெயின் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து ரவியின் லாகோஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications