பண மோசடி செய்த்வரைக் கைது செய்யக் கோரி தீக்குளிக்க முயன்ற பெண்
மதுரை: வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவரைக் கைது செய்யக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் எஸ்.மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் உள்ள கே.மகேஸ்வரி, லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து சுய உதவிக் குழு நடத்தி வருகிறார்.
குழுவில் இணைந்த 230 பேருக்கும் தலா 50,000 ரூபாய் கடன் வாங்கித் தருவதாக, தலா 6000 ரூபாய் வசூலித்துள்ளனர். தாங்கள் வசூலித்த பணத்தை ஆறுமுகம் என்பவரிடம் கொடுத்துள்ளார்கள்.
இந்த ஆறுமுகம் கடன் வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த எஸ்.மகேஸ்வரி, கே.மகேஸ்வரி, லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது எஸ்.மகேஸ்வரி திடீரென தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை தடுத்து நிறத்தியதோடு, 4 பேரையும் கைது செய்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
நகராட்சி முன்பு பெண் தீக்குளி்க்க முயற்சி:
இதற்கிடையே, கடையநல்லூர் நகராட்சி முன்பு இன்று காலை ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 2வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அமுதா கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தனது வீட்டிற்கு மின் இணைப்புக்கு கொடுப்பது சம்பந்தமாக வீட்டு தீர்வை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுவரை வீட்டு தீர்வை கட்டாதவர் மின் இணைப்பு பெறுவதற்காக வீட்டு தீர்வை கட்ட முன்வந்ததை அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 3 மாதங்களாக அமுதாவை அலைக்கழித்துள்ளனர்.
இதனால மனமுடைந்த அமுதா இன்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வீட்டு வரி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமுதா கூறுகையில், எனது வீட்டிற்கு தீர்வை கட்ட வேண்டுமென்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டனர். என்னிடம் அவ்வளவு பணவசதி இல்லை என்றேன்.
இதனாலேயே வரி விதிக்காமல் இழுத்தடிப்பு செய்தனர். மனமுடைந்த நிலையில்தான் இன்று தீக்குளிக்க முயற்சித்தேன்' என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications