மாவோயிஸ்டுகள் மீண்டும் அட்டகாசம்: சரக்கு ரயில் தடம் புரண்டது
ரூர்கேலா(ஒரிசா): ஹவுரா-மும்பை இடையிலான ரயில் பாதையில் மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை தகர்த்ததால், சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதனால் அந்த தடத்தில் இன்று காலை முதல் பல ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தின் ரூர்கேலா ரயில் நிலையத்துக்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் பலூலாட்டா மற்றும் ஜாரெய்கேலா ஆகிய ஊர்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தகர்த்தனர்.
நள்ளிரவில் சுமார் 1 மணியளவில் இந்த சம்பவம் நடத்ததாக தெரிகிறது. இதுபற்றி தெரியாமல் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில், தடம் புரண்டு சாய்ந்தது.
இதில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் சரிந்தன. எனினும் இந்த சம்பவத்தில் ஊழியர் அல்லது மற்றவர்களுக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
இதன் காரணமாக ஹவிரா மும்பை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற தடங்களிலும் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்திருக்கிறார்களா என தீவிர சோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்த்து மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் இந்த பந்த் காரணமாக நேற்று பீகாரில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications