வெறும் படம் தான் காட்டுகிறார் ராகுல்: பாஜக நக்கல்!
ராஞ்சி: விலைவாசி உயர்வு குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காத ராகுல்காந்தி, நாடு முழுவதும் சுற்றி வந்து படம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று பா.ஜ.க கிண்டலடித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் பேசுகையில்,
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர காங்கிரஸ் கட்சி எந்த முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடவில்லை.
எப்போது இப்பிரச்னையை எழுப்பினாலும், இதுகுறித்து விவாதிப்போம் என்ற பதிலைத் தான் காங்கிரஸ் மேலிடம் கூறிக்கொண்டிருக்கிறது.
நேற்று கூட பிரதமர் மன்மோகன் சிங் விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டை கூட்டினார். அதில் விலைவாசி உயர்வுக்கான காரணங்களை ஆராய தனிக் கமிட்டி அமைக்கப்போவதாக கூறியுள்ளார்.
ஆனால் இந்த கமிட்டியால் விளையப்போகும் பயன்கள் எதுவுமில்லை.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல்காந்தி நாட்டில் விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து இதுவரை எவ்விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதற்கு மாறாக நாடு முழுவதும் சுற்றி வந்து 'போட்டோ செஷன்' தான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் நக்வி.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications