பிரையஸ் கார்களையும் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ அறிவிப்பு!!
டொயோட்டா சிட்டி (ஜப்பான்): 'முதல் கிரீன் கார்' என்ற பெருமையுடன் டொயோட்டா நிறுவனம் ஜப்பானில் அறிமுகப்படுத்திய பிரையஸ் உயர் ரகக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில்தான் அமெரிக்காவில் விற்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் 8 மாடல்கள் திரும்பப் பெறப்பட்டன. அக்ஸலரேட்டர் பிரச்சினை காரணமாக இவை திரும்பப் பெறப்பட்டன.
இந்த நிலையில் அந்நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் காரான பிரையல் மாடலில் பிரேக்கிங் பிரச்சினை தொடர்வதாக ஏராளமான புகார்கள் வந்தன. என்ன செய்யலாம் என்று நிறுவனத்தின் உயர்மட்டக் குழு விவாதித்தது.
வேறு வழியின்றி இப்போது பிரையஸ் கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக டொயோட்டா இறுதி முடிவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகோயா நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டொயொட்டா நிறுவனத் தலைவர் அகியோ டொயோட்டா கூறுகையில், "முதலில் எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். பாதுகாப்புக் குறைபாடுள்ள ஒரு காரை நாங்கள் விற்றதற்காக வருந்துகிறோம், மன்னிப்பு கோருகிறோம். வாடிக்கையாளரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.
வாடிக்கையாளர் நலன் கருதி மொத்த பிரையஸ் மாடல் கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். இவற்றின் பிரச்சினைகளை முழுமையாக சரி செய்த பிறகே மீண்டும் வாடிக்கையாளர்களுக்குத் தரப்படும்.
இதற்கிடையே, ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோர்டு ஃப்யூஷன், மெர்க்குரி மிலன் மாடல்களில் இதே போன்ற பிரச்சினைகள் வந்துள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்தப் பிரச்சினையை உடனடியாக தெரிவிக்கும் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கியுள்ளது ஃபோர்டு. குறைகள் கண்டால் உடனடியாக இந்த சாப்ட்வேரில் பதிவு செய்துவிட வேண்டுமாம். பின்னர் அந்தக் கார்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்படுமாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications