தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விபரீதம்- விஷவாயு தாக்கி 2 பேர் பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில், தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மோட்டார் பழுதை சரி பார்க்க தொட்டிக்குள் இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
ஆம்பூர், மளிகை தோப்பு பகுதியில் தோல் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்குள்ள பம்ப்ஹவுஸ் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து அதை சரி பார்ப்பதற்காக நேற்று இரவு எலக்ட்ரீசியன் நெடுஞ்செழியன் (40), ஆபரேட்டர் மனோகரன் (40) ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டி மூடியை திறந்து விட்டு உள்ளே இறங்கினர்.
உள்ளே சென்றதும் கழிவு நீர் விஷ வாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications